டெல்லி: மத்தியஅரசு நாடு முழுவதும் உள்ள அனைவத்து மக்களுக்கும்  பொதுவாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மாநிலங்களில் கருத்து கேட்டு வருகிறது. ஆனால், இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இது தொடர்பான கருத்துக் கணிப்பில், மக்களின் மனநிலை, பொதுசிவில் சட்டம் தேவை என்பதை பிரதிபலித்துள்ளது. சுமார் 69 சதவிகித மக்கள், பொது சிவில் சட்டம் கொண்டு வர ஆதரவு தெரிவித்துள்ளர் என்பது   கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது இந்தியா டுடேயின் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கணக்கெடுப்பின்  பதிலளித்தவர்களில் 69% பேர் நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். 67 சதவீத மக்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக, தனது தேர்தல் அறிக்கையில்,  பொது சிவில் சட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து ஆகியவை  பிரதானமாக கூறிதான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  அதைத்தொடர்ந்தே காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மற்ற மாநிலங்களைபி போல அனைவரும் உரிமை வழங்கப்பட்டது. மேலும்,  குடியுரிமை சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.  ஆனால், பொதுசிவில் சட்டத்தை இன்னும் அமல்படுத் தவில்லை.

ஆனால், தேச ஒற்றுமையை பாதுகாக்கவும், பெண்களின் கெளரவத்தைப் பாதுகாக்கவும்,  பெண்களுக்கு நியாயம், நீதி கிடைக்கவும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதுகுறித்து சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருவதாக கூறி உள்ளது.  இந்த சட்டம் குறித்து, ஜனநாயகத்தில் ஆரோக்கியமான வெளிப்படையான, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. அந்த விவாதம் முடிந்த பிறகு அச்சட்டத்தை கொண்டு வருவோம் மத்தியஅரசு கூறி வருகிறது.

இந்தியா மதசார்பற்ற நாடு எனும்போது,  நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் எப்படி இருக்க முடியும்?, அனைவருக்குமான ஒரே சட்டம்தான் தேவை என சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். நாட்டில் அனைவரும் ஒன்றே எனும்போது, எதற்காக  ஒவ்வொரு மதத்தினருக்கும்  ஒவ்வொரு சட்டம். அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வருவதுதானே நியாயம். ஆனால்,  மதசார்ப்பற்ற அரசு என கூறும் எதிர்க் கட்சிகள்,  வாக்கு வங்கிகளை எண்ணி, பொது சிவில் சட்டத்துக்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில்தான்  ‘பொது சிவில் சட்டம்-2020’ என்ற இந்த மசோதா fடந்த ஆண்டு  (09-12-22), டிசம்பர் 9ந்தேதி அன்று பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா மாநிலங்களவையில்  அறிமுகப்படுத்தினாா்.  இந்த மசோதாவுக்கு,  தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள், அதாவது,  காங்கிரஸ் கட்சி,  திமுக, மதிமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

ஆனால், மசோதாவை அறிமுகப்படுத்தும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நடத்தினாா். அதில், தீா்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 23 வாக்குகளும் மட்டுமே பதிவாகின. இதைத்தொடர்ந்து பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து,  ‘மக்களின் மனநிலை’ என்ற தலைப்பில், இந்தியா டுடே, சி வோட்டர் நிறுவனம் இணைந்து,  தேசிய அளவில் கருத்துக் கணிப்பு கூட்டத்தை நடத்தியது.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தல்களை மோடி அரசு திறம்பட எதிர்கொண்டு வருகிறது. என்று பெரும்பாலான மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது பாஜக அரசின் மிகப்பெரிய சாதனை என்று மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைளுக்கு 67 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியமா என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் அவசியம் என்று பதில் அளித்துள்ளனர். 19 சதவீதம் பேர் மட்டுமே பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 13 சதவிகிதம் பேர் அதற்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

மத்திய பாஜக அரசு மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு  18 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களது அதிருப்தியை தெரிவித்து உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக, நாட்டில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என தெரிவித்து உள்ளனர்.

சமீப காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள  ஹிஜாபுக்கு தடை விதிப்பது சரியா என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் சரி என்றும் 26 சதவீதம் பேர் தவறு என்றும் பதில் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்பது குறித்து மக்களிடம் கேட்கப் பட்டது.

இதற்கு 38 சதவீதம் பேர், சரி என்றும், 19 சதவிகிதம் பேர்  அரசு நிர்வாகமே, நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்று  வாக்களித்துள்ளனர். 

அதே வேளையில், மத்திய அரசு மற்றும் நீதித்துறை இணைந்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று 31 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

இந்த ஆண்டு 10 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. அதுபோல, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த  நிலையில் இந்தியா டுடேவின் கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்

தமிழக அரசியல் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ‘பொது சிவில் சட்டம்-2020’ தனிநபர் மசோதா தாக்கல்…