Author: Sundar

வைக்கத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள ஜானகி அம்மாள் இல்லத்திற்கும் சென்றார்…

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் “வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டுக்கு…

நவ்ஜோத் சிங் சித்து சிறையில் இருந்து விடுதலையானார்…

1988 ம் ஆண்டு சாலையின் குறுக்கே காரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து-வால் தாக்கப்பட்ட குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சித்து மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் இருந்து பாட்டியாலா செஷன்ஸ்…

இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் வைக்கம் போராட்டம் அந்த மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் : மு. க. ஸ்டாலின்

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள காயல் கரையோர மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் “வைக்கம் போராட்டம்…

9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை தொடர்பாக புகாரளிக்கப்பட்டதை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர்…

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது … சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்டங்களை பிரிப்பது…

பாலியல் வன்கொடுமை வழக்கில் கலாக்ஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கலாக்ஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதாகக் கூறி மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த கல்லூரியைச்…

2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை

44 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாக 2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை நியூஸிலாந்து உடனான தொடரில் தோல்வியால் புள்ளிப் பட்டியலில் பின்தங்கிய இலங்கை 2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை…

செடிகளுக்கும் அழுகை வரும்… தாவரவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்…

செடிகளுக்கும் அழுகை வரும் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் செல்கள் அருகில் வைக்கப்பட்ட மைக்ரோபோன்கள் மூலம் இந்த அழுகை சத்தத்தை துல்லியமாக பதிவு செய்துள்ள இவர்கள் செடிகள்…

கலாஷேத்ராவில் மகளிர் ஆணைய தலைவர் விசாரணை நிறைவு… அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பேட்டி

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வரும் உதவிப் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன், நடன பயிற்சியாளர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது…

மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…

தமிழ்நாட்டைச் சேர்ந்த மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஏற்கனவே 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் மூலம் இந்தியாவிலேயே…