இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கான்கிரீட் சாலையை உருவாக்குவது சாட்டிலைட் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் (PoK) ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள சாலை 1963 இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது, சீனாவின் ஜின்ஜியாங்கில் G219 நெடுஞ்சாலையின் ஒரு பிரிவில் இந்த புதிய சாலை அமைக்கப்படுகிறது.

இந்தியாவின் வடக்குப் புள்ளியில் இருந்து சுமார் 50 கிமீ வடக்கே, சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் பகுதிக்கு அருகே உள்ள இந்த இடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் மார்ச் மாதம் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் மற்றும் இந்தியா டுடேயின் ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) குழு மதிப்பாய்வு செய்ததில், சாலையின் அடிப்படை பாதை கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கார்கில், சியாச்சின் பனிப்பாறை மற்றும் கிழக்கு லடாக் ஆகிய இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பான இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா கூறுகையில், “இந்த சாலை முற்றிலும் சட்டவிரோதமானது, மேலும் இந்தியா தனது அரசு ரீதியிலான எதிர்ப்பை சீனர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

‘நேச்சர் தேசாய்’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தோ-திபெத்திய எல்லைப் பார்வையாளர், ஒருவரால் இந்தக் கட்டுமானம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சியாச்சின் வடக்கே ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான சீன உந்துதலின் ஒரு பகுதியாக இந்த புதிய சாலை அமைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.