திருநள்ளாறு கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம்

திருநள்ளாறு திருநள்ளாற்றில் உள்ள கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். திருநள்ளாற்றில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நள நாராயண பெருமாள் கோவிள்அதிக பக்தர்களை ஈர்க்கும் கோவிலாக விளங்குகிறது.  இங்குள்ள ஸ்ரீ…

தேர்தலில் போட்டியிட மறுக்கும் மேற்கு வங்க பாஜக வேட்பாளர்

கொல்கத்தா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பவன்சிங் மறுத்துள்ளார் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன்படி…

வரும் 10 ஆம் தேதி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

டில்லி வரும் 10 ஆம் தேதி அன்று டில்லி நோக்கி செல்லும் பேரணியில் ரயில் மறியல் செய்ய உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாய சங்கத்தினர் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி பேரணி நடத்த முடிவு…

நாளை திமுக – மதிமுக இடையே 4 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

சென்னை நாளை நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக – மதிமுக இடையே 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.  திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.     இன்று சென்னை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பிரதமர் மோடி நாளை (4.03.2024) அன்று மாலை 5.00 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறும் “தாமரை மாநாடு” பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் இடம் மற்றும் அதைச் சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை. மவுண்ட் பூந்தமல்லி சாலை. சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடிச் சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளைத் தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் தடை செய்யப்படும் சாலைகளின் விவரம்:- * மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை * இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு * மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை. * அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு * விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி) * அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை * தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை.” என்று கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்பு

ஜாம்நகர் அம்பானியின் மகன் திருமணத்தையொட்டி நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினர் கலந்துக் கொள்கின்றனர். , இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவரான தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன். ஆனந்த் அம்பானிக்கும் – ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஜூலை…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்கள் நிரந்தர தடை மசோதா தாக்கல்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்களை நிரந்தரமாகத் தடை செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாக மாறி உள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானில் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.…

டில்லியில் பாஜக வேட்பாளராகும் சுஷ்மா ஸ்வராஜ் மகள்

டில்லி டில்லியில் பாஜக சார்பில் மறந்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் போட்டியிட உள்ளார். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத்…

கடந்த 2011 ல் இந்தியா 3 ஆம் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தது : ராகுல்’

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளத்தில், ”முந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில்…

மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர்களாகத் திரை நட்சத்திரங்கள்

டில்லி நேற்று வெளியான பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியலில் பல திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். விரைவில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று…