மாலே

மாலத்தீவு தேர்தலில் அதிபர் முகமது முய்சு வின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

நேற்று மாலத்தீவின் 20 ஆவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள  93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வின் செயல்பாடுகளால் அண்டை நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாகப் பார்க்கப்பட்டது.

நேற்றி மாலத்தீவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முய்சு கட்சி அதிகப்படியான இடங்களில் வென்றது. கிட்டத்தட்ட 66 இடங்களை முய்சு கட்சி வென்றுள்ளது. இது நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும். எனவே இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலுக்கு முன்பு முய்சு வின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 எம்பிக்கள் மட்டுமே இருந்ததால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாகக் கொண்டு வர முடியவில்லை. அதிபர் முகம்மது முய்சு எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டு வந்தது. அவருக்குத் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளதால், முகம்மது முய்சு நினைத்த சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.