காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது வினாடியில் விபத்துக்குள்ளானது.
இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர்.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர் விமானத்தின் பைலட் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பக்கட்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
விபத்து ஏற்பட்ட போது விமானம் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பொக்காராவுக்குச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
https://x.com/AnilKumarVerma_/status/1816018007736397876
விமான நிலைய ஓடுபாதைக்கு அருகே விழுந்த இந்த விமானம் தீப்பற்றி எரிந்ததை அடுத்து பயணிகள் உயிர்பிழைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
விபத்து நடந்த உடனேயே, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
https://x.com/Rinku_41/status/1816002386256667119
சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கான நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான திரிபுவன் சர்வதேச விமான நிலையம் அவசரகால பணியாளர்கள் பணிபுரிந்ததால் மூடப்பட்டது.
சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனம் 50 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட மூன்று விமானங்களைக் கொண்ட உள்நாட்டு விமான நிறுவனமாகும்.