பாரிஸ்: காதலியை 7 ஆண்டுகளாக கொடூரமாக சித்திரவதை செய்து, நூற்றுக்கணக்கான ஆண்களுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபட வைத்த முன்னாள் வங்கி மேலாளருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வங்கி மேலாளர் கில்லோம் புச்சி மீது, தனது காதலியான 42 வயது லேட்டிஷியாவை 2015 முதல் 2022 வரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

இணையம் மூலம் தொடர்பு கொண்ட நண்பர்கள், அந்நியர்கள் உள்ளிட்ட பலருடன் கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட வைத்ததாக லேட்டிஷியா நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அவமதிக்கும் வகையிலான பல்வேறு செயல்களுக்கும் தன்னை வற்புறுத்தியதாக கூறினார்.
“487 பேர்வரை எண்ணினேன். அதற்குப் பிறகு எண்ணிக்கையே மறந்து போனது. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள் இறந்து கொண்டே இருந்தேன்,” என லேட்டிஷியா கண்ணீர் மல்க சாட்சியம் அளித்தார்.
கழுத்தை நெரித்தல், உடலில் தீக்காயம் ஏற்படுத்தல் உள்ளிட்ட சில செயல்களை புச்சி ஒப்புக்கொண்டாலும், அவை “இருவரின் சம்மதத்துடன் நடந்தவை” என தெரிவித்தார்.
ஆனால், “என்னை மீறினால் கொலை செய்து விடுவேன்; வீடியோக்களை வெளியிடுவேன்” என்று புச்சி மிரட்டிய ஆடியோ, குறுஞ்செய்தி ஆதாரங்களை அரசு தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தொடர்ச்சியான சித்திரவதையால் லேட்டிஷியா தற்போது கடுமையான உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இவ்வழக்கில் ஆயுள் தண்டனை கோரி அரசு தரப்பு வாதிட்ட நிலையில், நீதிமன்றம் புச்சிக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மேலும், தண்டனையின் பெரும்பகுதியை அனுபவித்த பிறகே பரோலில் வெளியே வர முடியும் என்றும் உத்தரவிட்டது.
[youtube-feed feed=1]