பூச்சி கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ ஏற்றுமதி சீசனுக்கு முன் ஜப்பான் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து ஆய்வு நடத்துவது வழக்கம். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரஹ்மான்பூரில் உள்ள நீராவி வெப்ப சிகிச்சை (VHT) மையங்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, மாம்பழங்களில் பூச்சிகளை அழிக்கும் புகைமூட்டும் மற்றும் நீராவி வெப்ப சிகிச்சை நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய மாம்பழ இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு ஜப்பான் குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக, 1986-ஆம் ஆண்டு பழ ஈ தாக்குதல் அச்சம் காரணமாக இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்தது. பின்னர் 2006-ல் அந்தத் தடை நீக்கப்பட்டு இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, ஆண்டுதோறும் சுமார் 26 மில்லியன் மெட்ரிக் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது.
[youtube-feed feed=1]