தைபே: தைவானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

தைவானில் இன்று காலை  10க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து  நிலநடுக்கம் ஏற்பட்டது. 9 நிமிடங்களில் 10 முறை நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இது 6.1 ரிக்டர் பதிவாகி உள்ளது.   தைவானின் வடக்கு, மேற்கு மற்றும் தைபேயில் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது. இதனால் கட்டிங்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, தைவானைத் தாக்கிய சமீபத்திய 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தைபேயில் உணரப்பட்டது, உள்ளூர் நேரப்படி மாலை 5:08 மணிக்கு 8.9 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இதில், 17 பேர் காயமடைந்தனர்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல கட்டடங்கள் மட்டும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.  உயிர்சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த ஏப்ரல் 13ல் ஹூலாயின் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.