செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் மூலம் வேண்டியவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

சமூக வலைதளக் குழுக்கள் மற்றும் கம்யூனிட்டி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ஒருவரின் தொலைபேசி எண்கள் மற்றும் அவரது நண்பர்கள் வேண்டியவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் இந்த மோசடி கும்பல்.

அந்த தரவுகள் மற்றும் நண்பர்களின் குரல் மாதிரியைக் கொண்டு AI தொழில்நுட்பம் மூலம் அவசியம், அவசர தேவை போலவும் சோகமாகவும், பண உதவிகோரியும் குரலை மாற்றி பேசி எந்த ஒரு நபரிடம் இருந்தும் டிஜிட்டல் பேமென்ட் மூலம் சில நிமிடங்களில் பணத்தை பறிக்கின்றன.

பணத்தை அனுப்பிய பின்னர் தங்கள் நண்பர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையோ பண அவசியமோ எழவில்லை என்று தெரியவரும் போது தான் மோசடியாக ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர்.

பேஸ்புக் மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடி வரிசையில் இதுபோன்ற AI தொழில்நுட்ப மோசடியும் சேர்ந்துள்ள நிலையில் இதுபோன்ற மோசடியாளர்களிடம் மக்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, தாங்கள் AI தொழில்நுட்ப குரல் மோசடி மூலம் பணத்தை இழந்திருந்தால் இதுகுறித்து சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 அல்லது http://cybercrime.gov.in இல் புகாரைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.