சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.  வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று கூறி வரும் கமல்ஹாசன், சமீப காலமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். அதுபோல, கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிடுவார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் உடன் தனது கட்சியை கமல்ஹாசன் இணைக்கப்போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  திடீரென தகவல் வெளியானது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அந்த தளம் ஹேக்கிங் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. விஷமிகள் மநீம இயைதளத்தில், கட்சியை காங்கிரசுடன் இணைக்கப்போவதாக தகவல் பதிந்துள்ளனது தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  மநீம இணையதள நிர்வாகிகள், மநீமக இணையதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் தற்போது அந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மவிளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “ மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த இணையதளத்தில் வெளியான செய்தியில், ‘ “மகாத்மா காந்தி இந்துத்துவ வெறியரால் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30-ம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சியானது காங்கிரஸுடன் இணைக்கப்படுவதாகவும், கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் டெல்லியில் இந்த இணைப்பு விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கமல்ஹாசன் முன்னாள் காங்கிரஸ் தலைவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியதிலிருந்து தனது அடுத்த நகர்வுகளை யோசித்து வந்ததாகவும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் பல்வேறு சுற்று விவாதங்கள் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடியரசு தினத்தை கொண்டாடிய ஒரு நாள் கழித்து இன்று ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைய முடிவு செய்துள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாகவும் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி குறித்து சில ஊடங்களிலும், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இந்த தகவல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மறுக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து விளக்கமும் வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.