டெல்லி:  நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்!, இது அவசியமானது என மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை டெல்லி உயர்நிதி மன்றம் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில், அரசியல் சாசனப்படி, சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன.  கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், சிவில் சட்டம் மதம், இனம் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள பொது சிவில் சட்டம் நாடாளுமன்ற அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒவ்வொரு தனிமனிதரின் திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவனாம்சம் உள்ளிட்ட சிவில் விவகாரங்களை அவரது மதம் சார்ந்த தனிச்சட்டங்களின்படி செய்துகொள்ளலாம்.

இதனால் மோடி அரசு கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என கூறியது. மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டம் என்பது, நாட்டில் வசிக்கும்  எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம் என்பதே. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் (Indian Constitution) 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது என்பதோடு, பாஜக தனது தேர்தல் வாக்குறுதியிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என கூறியிருந்தது. இந்த பொது சிவில் சட்டம் நேருவின் காலம் தொட்டே சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது.

இந்த நிலையில்தான், டெல்லி உயர்நீதிமன்றம் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வாருங்கள் என பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதன்படி, பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தப்பட்டால்,  இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான நடவடிக்கைகளேற பின்பற்றப்படும், ஷரியத்  மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம். சிங், நவீன காலத்திற்கு ஏற்ப இந்திய சமூகம்  சிறிது சிறிதாக மாறி வருகிறது. மதம், சமூகம் மற்றும் சாதியின் பாரம்பரிய தடைகளை களைந்து, ஒரே விதமாக முன்னேறி வருகிறது. மாறிவரும் இந்த கால சூழ்நிலைகளை பார்க்கும்போது, நாட்டில், ஒரு பொதுவான சிவில் சட்டம் தேவை என்பதை உணர்த்துகிறது”

”நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன். இதை அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என நீதிபதி குறிப்பிட்டார்.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து, மத்திய பாஜக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மதச்சட்டத்யே பின்பற்றி வரும் இஸ்லாமியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.