மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜூன் 6-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு வேலைவாய்ப்பு உரிமை இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இயக்கத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ. தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், ஓய்வூதிய உரிமை, அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பெருநிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் பிரசாரம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் கல்வி அமைப்பை சீர்குலைத்துள்ளதாகவும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
[youtube-feed feed=1]