அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் உள்ள காணிக்கைப் பெட்டிகளில் இருந்து பணம் எடுத்து எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் இனி முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

காணிக்கை நிதி முறைகேடு குறித்த விசாரணையை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), கோவில் நிர்வாகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இதுவரை காணிக்கைப் பெட்டிகளில் இருந்து பணம் மற்றும் மதிப்புள்ள பொருட்கள் எடுக்கப்படும் பணிகள் வீடியோ பதிவு செய்யப்படாததால், எந்தப் பெட்டியில் இருந்து தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன என்பது தெளிவாக தெரியவில்லை. இதை பயன்படுத்தி பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

6 நாட்கள் விசாரணை நடத்திய SIT, தனது ஆரம்பகட்ட அறிக்கையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பித்துள்ளது. விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அலட்சியங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், அறக்கட்டளை உறுப்பினராக இல்லாத கோபால் ராவ் முக்கிய பொறுப்புகளை கவனித்தது மற்றும் அறங்காவலர் டாக்டர் அனில் மிஸ்ரா தனது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றத் தவறியது உள்ளிட்ட அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், காணிக்கை தொகை எண்ணும் பணியின்போது திருட்டு நடந்ததற்கான ஆதாரங்களும், சிலரின் வாக்குமூலங்கள் ஆவணங்களுடன் பொருந்தாததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, விரைவில் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]