மேலும் 5,42,800 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வருகை

Must read

சென்னை

இன்று சென்னைக்கு மேலும் 5,42,800 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வரும் போதிலும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   இதனால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பிரித்து அளிக்கிறது.   அவற்றை மாநிலங்கள் மாவட்ட வாரியாக பிரித்து அளிக்கின்றன.

இன்று சென்னைக்கு 5,42,800 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன.  இதுவரை மொத்தம் 1,90,84,760 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன.  இதில் நேற்று வரை 1,83,56,631 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இன்று வந்துள்ள தடுப்பூசிகள் நாளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட உள்ளன.

 

More articles

Latest article