Category: தமிழ் நாடு

துவங்கியது மதிமுக மாநாடு:  குவிந்தனர் தொண்டர்கள்!

பல்லடம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 107வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை  8 மணிக்கு துவங்கியது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாலிகுட்டை அருகே 52 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல்…

தன் மீதே சேற்றை வீசிக்கொள்கிறார் வாசன்!: காங். செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்

சென்னை:  “காங்கிரஸை குறை சொல்வதன் மூலம் தன் மீது தானே சேற்றை வீசிக்கொள்கிறார் ஜி.கே. வாசன்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஜி.கே.வாசன். சில நாட்களுக்கு முன்,…

இலங்கைத் தமிழர்களை வெளியேற்றத் துடிக்கும் மோடி: உடன்படும் ஜெ

1983 இனக்கலவரத்தின் பின்னணியில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களின் கதி தொடர்ந்து அந்தரத்திலேயே தொங்குகிறது. மாநிலத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 65,000 பேரும், வெளியே மேலும் 40 ஆயிரம் பேரும் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் கொடுமை ஓய்ந்து மெல்ல மெல்ல…

சகாயம் மனநோயாளி! : முருகன் ஐ.ஏ.எஸ்

.: சென்னை: “ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில்,…

சி.க: தமிழர் வரலாற்றுக்கு சமாதி! தடுப்பார்களா தலைவர்கள்?

“தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா?” என்று பதைபதைத்து நிற்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும்…. “தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா” என்று பதைபதைத்து நிற்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும். இது குறித்து விரிவாக அறிய…

ஒத்துழைக்காத போலீஸ்! சுடுகாட்டில் சகாயம் ஐ.ஏ.எஸ்.!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட போலீசார் ஒத்துழைக்கவில்லை என சகாயம் ஐ.ஏ.எஸ். குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தடயங்கள் அழிக்கும் வாய்ப்பு இருப்பதால், அந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள…

மின் திருட்டில் மின்னும் கருணாநிதி! தடுப்பரா திமுகவினர்?

  சென்னை: மின்சார தட்டுப்பாடு ஒருபுறம், மின் கட்டண ஏற்றம் மறுபுறம் என்று பொதுமக்கள் அல்லல் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பிலான கூட்டத்துக்காக அவரது மின் உருவம் பெரும் மின் திருட்டில் மின்னிக்கொண்டிருக்கிறது.   சென்னை…

உலக முதலீட்டாளர் ஒப்பந்தங்கள்: உங்கள் மாவட்டத்துக்கு எத்தனை கோடி?

சென்னை: தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு பிரம்மாண்டமாக இரு நாட்கள் நடந்து முடிந்தது. “ மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடுகள் வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன” என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.…

மரண விசா: திருச்சியில் மட்டும் 275 சடலங்கள்!

திருச்சி: தமிழகத்திலிருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்பவர்களில் பல காரணங்களினால் சிலர் இறக்கிறார்கள். அப்படி கடந்த 2014 -15 நிதி ஆண்டில் திருச்சி விமான நிலையத்துக்கு மட்டும் 275 சடலங்கள் வந்திருக்கின்றன என்ற அதிரச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதிகம் சம்பாதிக்கலாம் என்பதாலோ, தகுந்த…

விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்றிய சரத்குமார்

ஆலங்குளம்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொழிலாளியை தனது காரில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார் நடிகர் சரத்குமார். நேற்று முன்தினம் மதியம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நெல்லை மாவட்டம் வந்தார் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான சரத்குமார். ஆலங்குளம் – தென்காசி சாலையில்…