சென்னை,

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு, சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னிய செலாவணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில்  இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜரானார். மற்றொரு குற்றவாளியான பாஸ்கரன் சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

1996-97-ஆம் ஆண்டு ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில்   ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்க ளுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன், சுதாகரன், தினகரன் ஆகியோர் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.

இதுகுறித்த வழக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் உயிர்பெற்றுள்ளது. கடந்த முறை விசாரணையின்போது, இந்த வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால்  சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சென்னைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படும் என்தாப போலீஸ் கூறியதை தொடர்ந்து,, வீடியோ காண்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்றைய விசாரணையின்போது, பகல் 12 மணி அளவில், பெங்களூர் சிறையில் இருந்து வீடியோ காண்பரன்சிங் மூலம் ஆஜரானார். சுமார் 50 நிமிடம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

நீதிபதி அவரிடம் தமிழில் கேள்வி கேட்டு குற்றச்சாட்டை பதிவு செய்தார். ஆனால், சசிகலா குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஏற்கனவே  நேற்று சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.