புழல் சிறையில் மோதல்! ஒருவர் காயம்

Must read

சென்னை:

புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

கொலை வழக்கு கைதிகள் 4 பேர் சேர்ந்து தாக்கியதில் கைதி  ரமேஷ் என்பவர் காயம் அடைந்துள்ளார்.

தமிழகத்தின் மிகப்பெரிய சிறைச்சாலையான புழல் சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

புழல் சிறை 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பிரிவில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் 1,280 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்க முன்பு பாகிஸ்தான் தேசிய கொடியுடன் அட்டைப்பெட்டி கிடந்தது. அதனுள் பாகிஸ்தான் கொடிகள், செல்போன் ஆகியவை இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் விசாரணை கைதி  ரமேஷ் என்பவர் காயம் அடைந்துள்ளார். காயம் அடைந்த ரமேஷ்-க்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article