லக்னோ,

பாரதியஜனதா சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் குடியரசு தலைவர் உ.பி.மாநிலத்தை சேர்ந்தவர். பல்வேறு பிரதமர்களை நாட்டுக்கு தந்துள்ள நாட்டின் மிகப்பெரிய மாநில உத்தரபிரதேசத்தில் இருந்து தற்போது நாட்டின் முதல் குடிமகனை ஜனாதிபதியாக நிறுத்தி உள்ளது.

இந்தியவின் மிகப்பெரிய மாநில உத்தரபிரதேசத்தில் இருந்து இதுவரை 8 பேர் பிரதமர் பதவியை அலங்கரித்துள்ளனர். தற்போது  முதன் முதலாக குடியரசு தலைவர் பொறுப்பையும் கோவிந்த் அலங்கரிக்க இருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, சரண்சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், அடல்பிகாரி வாஜ்பாய் உள்பட 8 பிரதமர் நாட்டுக்கு கொடுத்து உ.பி மாநிலம் தற்போது நாட்டின் முதல் குடிமகனையும் கொடுத்துள்ளது.

1969-ம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த ஜாகிர் உசேன் இறந்ததையடுத்து, தலைமை நீதிபதியாக இருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஹிதயதுல்லா, தற்காலிக குடியரசுத் தலைவராக சில மாதங்கள்  பதவி வகித்தார்.

தற்போது,  ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் போட்டிக்கு தேர்வாகி உள்ள நிலையில், அவர் உத்தரப்பிரேசத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்கிற பெருமையை பெறுகிறார்.