டில்லி,

ய்வுபெற்ற நீதிபதி கர்ணன் நேற்று இரவு கோவையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது கைதை நிறுத்தி வைக்க, அவரது வழக்கறிஞர் இன்று உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்து, அவரது தண்டனையை நிறுத்தி வைக்க முடியது என்று  உச்சநீதி மன்றம் மீண்டும்  மறுத்து உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நீதிபதி கர்ணனுக்கு, உச்சநீதி மன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து.இதைத்தொடர்ந்து, அவர் தலைமறைவானார்.

கடந்த மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் ஓய்வு பெற்றார். சுமார் 43 நாட்கள் தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், நேற்று இரவு கோவை அருகே தனது உறவினர் வீட்டியில் இருந்தபோது, தமிழக, மேற்குவங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரது தண்டனையை நிறுத்தி வைக்கும்படி அவரது வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டனர் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

இதன் காரணமாக இன்று கொல்கத்தா கொண்டு செல்லப்படும்  நீதிபதி கர்ணன், அங்கு சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.