தமிழகத்தில் நேற்று மாவட்ட வாரியான கொரோனா விவரம் :

சென்னையில் 149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் நேற்று எந்த உயிரிழப்பும் இல்லை.

சென்னையை தொடர்ந்து கோவையில் 62 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இங்கு 55 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவையை தொடர்ந்து செங்கல்பட்டில் 36 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று மட்டும் 31 பேர் குணமடைந்த நிலையில், இங்கும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

கோவை, செங்கல்பட்டு தவிர, திருச்சி, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்திருக்கிறார்கள்.