Month: December 2022

துணிவு படத்தின் டிரெய்லர் வெளியானது…

அஜித் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. அட்டகாசமான நடிப்பில் ‘துணிவு’ படத்தின் மூலம் தனது ரசிகர்களை மீண்டும் அமர்க்களப் படுத்தி இருக்கிறார் அஜித். Gangs, guns, mind games, and money🔥#ThunivuTrailer OUT NOW – https://t.co/mPfG9x0Kez#ThunivuPongal #NoGutsNoGlory…

கடல்ல பேனா வைக்க 89 கோடி நிதி இருக்கு; ஆனால் ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்லையா? தமிழகஅரசை விமர்சித்த டிடிவி தினகரன்…

சென்னை: கடல்ல பேனா வைக்க ரூ.89 கோடி இருக்கு; ஆனால் ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்லையா?  என தமிழகஅரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றாதை கண்டித்து, தங்களது…

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  “ஆண்டொன்று போனால் – வயதொன்று கூடும்” என்று வாழ்வதல்ல வாழ்க்கை; ஆண்டொன்று போனால் – வளர்ச்சி பல மடங்கு கூடும் என்று வாழ்வது தான் வாழ்க்கை என்றும், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை…

தமிழ்நாடு முழுவதும் சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படும்! கனிமொழி, தங்கம் தென்னரசு தகவல்..

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் சென்னை சங்கமமும், நம்ம ஊரு திருவிழாவும் நடத்தப்படும் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி.  அறிவித்துள்ளனர். இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர்,…

சமூக வலைத்தளங்களுக்கு ஆதார் எண் கொடுக்க வேண்டாம்! பயனர்களுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை…

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆதார் எண் கேட்கப்பட்டால், அதை கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஆதார் நிறுவனமான உதய் (UDAI) ,இது தொடர்பாக எச்சரித்திருந்த நிலையில், தற்போது மத்தியஅரசும், ஆதார் எண்ணை கொடுக்க வேண்டாம்…

ரிஷப் பண்ட்-டை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனரை கௌரவித்த ஹரியானா அரசு… வீடியோ…

உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது சொந்த ஊரான டேராடூனுக்கு சொகுசு காரை ஒட்டிச் சென்றார் ரிஷப் பண்ட். அதிகாலை…

அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், நல்லிணக்கம் தரட்டும்! ஆளுநர் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், நல்லிணக்கம் தரட்டும் என தமிழக ஆளுநர் ஆர்.ரவி உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர,…

நீக்கப்பட்ட 2,400 நர்சுகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகிழ்ச்சி செய்தி…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 2400 தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு   ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை…

ஆதாருடன் இணைக்க ஜனவரி 31வரை அவகாசம் – இதுவரை1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு! செந்தில் பாலாஜி…

சென்னை:  மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி…