சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 2400 தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு   ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,  கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க தேசிய சுகாதார குழுமத்தின் வழி காட்டுதல்படி ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு விதிமுறைகளை அ.தி.மு.க. அரசு முறையாக கடைபிடிக்காமல் நர்சுகள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுவே சிக்கலுக்கு காரணம். இனிமேல் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என்று நிதித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் 2,400 நர்சுகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம், குடும்ப சூழல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்றோம். அவரது ஆலோசனையின் பேரில் இந்த நர்சுகளை நீக்காமல் துறை பணியில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். சம்பளத்தை பொறுத்தவரை என்.எச்.எம். விதிமுறைப்படி வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், கடந்த ஆட்சியின்போது, இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு விதிமுறைகளை அ.தி.மு.க. அரசு முறையாக கடைபிடிக்காமல்  கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க தேசிய சுகாதார குழுமத்தின் வழி காட்டுதல்படி ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த  நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நர்சுகள்  தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் பணிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, முன்னிரிமை அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்க முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட 2300 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை! வாக்குறுதியை பறக்க விட்ட திமுக அரசு…