சென்னை:  மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி  கூறியுள்ளார்.  ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 31ந்தேதி கடைசி நாள் என்ற நலையில், தற்போது, ஜனவரி 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என்று அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பகுதிவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். தினசரி 3 முதல் 4 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருவதாகவும், இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக, இதற்காக  தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

நேற்று மட்டும்  (30.12.2022)  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.64 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 1.73லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறினார்.