அஜித் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

அட்டகாசமான நடிப்பில் ‘துணிவு’ படத்தின் மூலம் தனது ரசிகர்களை மீண்டும் அமர்க்களப் படுத்தி இருக்கிறார் அஜித்.

மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.