சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார் . ஏறகனவே அஜித் குமாரின் தந்தை கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இன்று அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார். அவருக்கு வயது 84. வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமான தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார் ரேஸ், கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவது பெற்றோர்களான தந்தை சுப்பிர மணியம்- தாய் மோகினி ஆகியோர் சென்னை பாலவாக்கத்தில் தனியாக வசித்து வந்தனர். அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில், அஜித்தின் தாயாரான மோகினி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
மோகினி மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட தமிழ் திரையுலகம் மற்றும் அரசியலில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது மறைவுக்குத் துயரம் வெளிப்படுத்தியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவுரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
[youtube-feed feed=1]