சென்னை:  தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் சென்னை சங்கமமும், நம்ம ஊரு திருவிழாவும் நடத்தப்படும் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி.  அறிவித்துள்ளனர்.

இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர்,  ஜனவரி முழுவதும் தமிழ்நாட்டில் விழாக்கோலம் பெரும் வாய்ப்பு உள்ளது என்றும்,  தமிழர்களின் கலைகள் பறை சாற்றும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இரு தழுவுதல், பன்னாட்டு புத்தக கண்காட்சி, சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது

சென்னையில் சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா ஆகியவை இணைந்து ஜனவரி மாதம் 13ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை  கொண்டாடப்பட உள்ளது என தெரிவித்ததுடன்,  இந்த திருவிழா கொண்டாட்டமானது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு , இந்த நிகழவை 13ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

மேலும், சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஏழு மண்டலங்களில் சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக தலைமைச் செயலகத்0தில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 13 முதல் 17 வரை சென்னையில் நடைபெறவுள்ள “நம்ம ஊரு திருவிழா” தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, , ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சென்னை சர்வதேச புத்தக திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.