Month: March 2019

பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.27 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது

 சென்னை: பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது. ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து திங்களன்று காலை 6.27 மணிக்கு ஏவப்படும் எமிசாட் சாட்டிலைட், 3 கோள்களில் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும். அதேபோல் விண்வெளி ஆராய்ச்சிலும் ஈடுபடுவது இது…

8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சிஎஸ்கே: டோனியின் அபார ஆட்டத்தால் திருப்பம்

சென்னை: 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சிஎஸ்கே. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜன் சிங்குக்குப் பதிலாக சான்ட்னெர் களமிறங்கினார். வாட்சன், அம்பதி ராயுடு…

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் இடதுசாரிகளுக்கும், பாஜகவுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: அரசியல் விமர்சகர்கள் கருத்து

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரிகளுக்கும், பாஜகவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. வட கேரளாவில்…

இலக்கை விரட்ட ஆசைப்பட்ட கோலி – 113 ரன்களில் சுருண்ட பரிதாபம்!

ஐதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர் அணியின் கேப்டன் விராத் கோலி, டாஸ் வென்றும்கூட, பேட்டிங்கிற்கு சாதகமான ஒரு பிட்சில்,…

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தனித்தனியே ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஆதார் அடையாள எண் உருவாக்கப்பட்டது. ஆதார் எண்ணை கேஸ்…

1996 நிலைமை வேறு… இப்போதைய நிலைமை வேறு…

சமீபத்தில் பேசிய அசாதுதீன் ஓவைஸி, தேர்தலுக்குப் பிறகு, ஒரு பிராந்திய தலைவர்தான் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று பேசியிருந்தார். ஆனால், ஓவைஸியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று அரசியல் விமர்சகர்கள் பலர் அதை மறுத்துள்ளனர். இதுதொடர்பான அவர்களுடைய கருத்துக்களின் சுருக்கம்: தெலுங்கானா முதல்வர்…

காப்பக பாலியல் முறைகேடு குற்றவாளி இப்போது தேர்தல் பிரச்சாரத்தில்..!

பாட்னா: பீகாரின் முசாஃபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் முறைகேடுகளில் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட பாரதீய ஜனதாவின் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா, தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் கவலையின்றி ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து கூறப்படுவதாவது; பீகார் மாநிலத்தின் முசாஃபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் முறைகேடுகள்…

காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பிற்கான விதிமுறைகள் மாற்றம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடமாடும் துணை ராணுவப் படையினரின்(CRPF) வாகனப் பரிவாரங்களை, இனிமேல், காவல் கண்காணிப்பாளர் நிலையிலிருக்கும் ஒரு அனுபவம் வாய்ந்த அதிகாரி தலைமையேற்று வழிநடத்தும் வகையிலான புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகன அணிவகுப்பில், 40 வாகனங்களுக்கு மேல் இடம்பெறாது…

உஜ்வாலா திட்டம் தோல்வி என்பதை காட்டும் வீடியோ பகிர்வா? : சர்ச்சையில் பாஜக வேட்பாளர்

பூரி பாஜக வேட்பாளர் சம்பித் பாத்ரா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ உஜ்வாலா திட்டம் என்னும் இலவச எரிவாயு திட்டத் தோல்வியை காட்டுவதாக சர்ச்சையை கிளப்பி உள்ளது. பிரதமர் மோடி உஜ்வாலா திட்டம் என்னும் இலவச எரிவாயு திட்டத்தை தனது கனவு திட்டமாக…

தேசியவாதம் போருக்கு இட்டுச்செல்லும்: முன்னாள் ‘ரா’ தலைவர்

ஐதராபாத்: நாட்டுப்பற்று என்பதே போதுமானது; தேசியவாதத்தின் மீது அழுத்தம் ‍ தேவையில்லை. ஏனெனில், தேசியவாதம் என்பது போரில்தான் சென்று முடியும் எனக் கூறியுளளார் முன்னாள் ரா அமைப்பின் தலைவர் ஏஎஸ் துலாத். புலவாமா தாக்குதல் என்பது நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாரதீய ஜனதா கட்சி…