ஐதராபாத்: நாட்டுப்பற்று என்பதே போதுமானது; தேசியவாதத்தின் மீது அழுத்தம் ‍ தேவையில்லை. ஏனெனில், தேசியவாதம் என்பது போரில்தான் சென்று முடியும் எனக் கூறியுளளார் முன்னாள் ரா அமைப்பின் தலைவர் ஏஎஸ் துலாத்.

புலவாமா தாக்குதல் என்பது நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாரதீய ஜனதா கட்சி அல்லது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு என்று கூறியுள்ள அவர், பாகிஸ்தான் எல்லைக்குள் உட்புகுந்து சென்று விமானத் தாக்குதல் நடத்திய செயலும் சரியானதுதான் என்றும் கூறியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக தெரிவித்துள்ளதாவது; சில சம்பவங்கள் நடந்தாக வேண்டுமென்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, பாகிஸ்தானின் உள்புகுந்து நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையும் சரியானதே.

தேசியவாதம் என்பது பரந்த மனப்பான்மையோடு அணுகப்பட்டால் அதில் பிரச்சினையொன்றும் இல்லை. அதேசமயம், குறுகிய நோக்கங்களோடு தேசியவாதம் அணுகப்பட்டால் அதில் சிக்கல்கள்தான் அதிகம்.

எனவே, என்னைப் பொறுத்தவரை, நாட்டுப்பற்று என்பதே போதுமானது. தேசியவாதம் என்பதில் அழுத்தம் தேவையில்லை. ஏனெனில், கடந்தகால வரலாற்றைப் பார்த்தால், தேசியவாதம் என்பது பல சமயங்களில், போருக்கு இட்டுச்செல்லும் வழியாக இருந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

– மதுரை மாயாண்டி