சீன அதிபர் ஸி ஜின்பிங் அமெரிக்காவை வீழ்ச்சியடைந்த நாடு என குறிப்பிட்டது 100 சதவீதம் சரி தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“அமெரிக்கா வீழ்ச்சியடைந்த நாடு என ஸி ஜின்பிங் கூறியிருந்தால், அது தற்போதைய அமெரிக்காவை பற்றி அல்ல. முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றித்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியது 100 சதவீதம் சரியானது.

பைடன் ஆட்சியில் திறந்த எல்லைகள், அதிக வரிகள், மோசமான வர்த்தக ஒப்பந்தங்கள், அதிகரித்த குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அமெரிக்கா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாறியுள்ளது. எனது ஆட்சியின் 16 மாதங்களில் பங்குச்சந்தை உச்சத்தை தொட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் மீண்டும் வலுவடைந்துள்ளது. உலக நாடுகள் அமெரிக்காவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
மேலும், சீனாவுடன் அமெரிக்காவின் உறவு இனி மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்,” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]