சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசிகள் உயரும் என அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த 15ந்தேதி முதன்முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில், இன்று (மே 25) 4வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ,ரூ.2.46 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.107.77 ஆக விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.2.57 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.99.55 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அமல்படுத்தியுள்ளன.
இந்த தொடர் விலை உயர்வு நாடு முழுவதும் பணவீக்கம், போக்குவரத்து மற்றும் தினசரி பயணச் செலவுகள் ஆகியவற்றில் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
[youtube-feed feed=1]