சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 8000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தவெக அரசு அனுமதி வழங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்அளித்துள்ளது.
இந்தச் செய்தி மருத்துவ வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. மேலும் மருத்துவத்தை கார்ப்பரேட் மாஃபியாக்களுக்கு வழங்க தவெக அரசு முடிவு செய்துள்ளது என்றும், இதனால் மருத்துவம் தனியார் மயமாகும்,ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இநத நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை தற்பொழுது அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று மாநில சுகாதாரத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வரும் பழைய விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் மறுபரிசீலனை செய்வது குறித்து மட்டுமே அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் அனைத்து விதிகளின்படி முழுத் தகுதியுள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே தற்காலிகச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997-ன் படி online web portal மூலம் பதிவு பெற வேண்டி 2019 முதல் ஏற்கனவே விண்ணப்பித்து நிலைவையில் உள்ள 8,000 விண்ணப்பங்களை முறைப்படுத்துதல் குறித்து வெளியான செய்தி குறித்த விவரம்.
21.05.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் (சி.இ.ஏ) குறித்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது, 2019 முதல் விண்ணப்பித்து நிலைவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள க்ளினிக்/ மருத்துவமனைகளுக்கு மட்டும் தற்காலிகச் சான்றிதழ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.
சில செய்திகளில் வருவது போல் புதிதாக 8,000 க்ளினிக்/ மருத்துவமனைகள் துவங்குவதற்கு உண்டான எந்த விதமான அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]மெடிக்கல் மாஃபியாவுக்கு துணை போகிறதா? 8000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தவெக அரசு பச்சைக்கொடி!