ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடமாடும் துணை ராணுவப் படையினரின்(CRPF) வாகனப் பரிவாரங்களை, இனிமேல், காவல் கண்காணிப்பாளர் நிலையிலிருக்கும் ஒரு அனுபவம் வாய்ந்த அதிகாரி தலைமையேற்று வழிநடத்தும் வகையிலான புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் வாகன அணிவகுப்பில், 40 வாகனங்களுக்கு மேல் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலுள்ள ராணுவ வாகன அணிவகுப்பு தொடர்பான தலைமையகத்திலிருந்து இந்தப் புதிய விதிமுறைகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வாகனத்தின் பாதுகாப்பிலும் அதீத கவனம் செலுத்தப்படும். இந்த அணிவகுப்பை தலைமையேற்று வழிநடத்திச் செல்லும் அதிகாரி, மத்திய துணை ராணுவப் படையின் டிஐஜி -யிடம் நேரடியாக தொடர்புகொள்வார். இதற்கு முன்பு, அதுபோன்ற நடைமுறை கிடையாது.

மேலும், இதுவரை, காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பை வழிநடத்திச் செல்பவர் துணை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான அதிகாரியாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி