டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,13,945 ஆக உயர்ந்து 1,59,405 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,643 பேர் அதிகரித்து மொத்தம் 1,15,13,945 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 155 அதிகரித்து மொத்தம் 1,59,405 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 20,338 பேர் குணமாகி  இதுவரை 1,10,81,508 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2,68,338 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 25,833 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,96,340 ஆகி உள்ளது  நேற்று 58பேர் உயிர் இழந்து மொத்தம் 53,138 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,174 பேர் குணமடைந்து மொத்தம் 21,75,565 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,66,353 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,899 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,98,292 ஆகி உள்ளது.  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,451 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,119 பேர் குணமடைந்து மொத்தம் 10,68,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 25,159 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,488 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,65,102 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,415 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 341 பேர் குணமடைந்து மொத்தம் 9,41,309 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,359 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 218 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,92,740 ஆகி உள்ளது.  இதுவரை மொத்தம் 7,186 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 117 பேர் குணமடைந்து மொத்தம் 8,83,759 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 989 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,63,363 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,573 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 569 பேர் குணமடைந்து மொத்தம் 8,44,568 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.