சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு வங்கதேசத்தில் ரெமல் புயல் கரையைக் கடக்கும் என அறிவித்துள்ளது.

க்டந்த 22 ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்று மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நேற்று இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காலை புயலாக வலுபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

நேற்று இரவு 7.30 ம்ணிக்கு மத்திய வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாரா என்ற பகுதியிலிருந்து சுமார் 360 கி.மீ. தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு வங்கம்- சாகர் தீவிலிருந்து 350 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது. தற்போது இந்த புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேசத்தின் கேப்புப்பாரா- மேற்கு வங்கத்தின் சாகர் தீவு இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது தரைக்காற்று மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இந்த நிகழ்வின் காரணமாக இன்று முதல் வெள்ளிக்கிழமை (மே 26-31) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று மற்றும் நாளை (மே 26, 27) குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனிடையே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் மே 29 வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெவித்துள்ளது.