குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகர கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 20 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இறந்தவர்களில் 12 குழந்தைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலத்த தீக்காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்ற நிலையில் நகரில் உள்ள அனைத்து கேமிங் ஜோன்-களையும் மூட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பல கிலோமீட்டர் தூரம் புகை மூட்டம் காணப்பட்டதை அடுத்து நகர மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய பலரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி இருந்ததாகக் கூறிய அதிகாரிகள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தனர்.