டெல்லி

நேற்றைய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 59.06% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்  கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல்  கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும்  நடைபெற்றது

நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பீகார் (8), ஜார்க்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நேற்றிரவு 7.45 மணி நிலவரப்படி மொத்தம் 59.06% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக விவரங்கள்: 

பீகார் – 53.30 சதவீதம்

ஹரியானா – 58.37 சதவீதம்

ஜம்மு காஷ்மீர் – 52.28 சதவீதம்

ஜார்க்கண்ட் – 62.74 சதவீதம்

டெல்லி – 54.48 சதவீதம்

ஒடிசா – 60.07 சதவீதம்

உத்தர பிரதேசம் – 54.03 சதவீதம்

மேற்கு வங்கம் – 78.19 சதவீதம்.

இந்த 58 தொகுதிகளில் மேற்குவங்க மாநிலத்தின் 8 தொகுதிகளில் மட்டுமே அதிக சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.