டெல்லி

கிழக்கு டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளன.

தலைநகர் டெல்லியில் உள்ள கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. நேற்றிரவு 11.30 மணிக்கு இந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்தன. மீதமுள்ள 6 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

நேற்று குஜராத்தில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந் நிகழ்வு நடைபெற்ற அதேநாளில் டெல்லி மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டு 7 குழந்தைகள் உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.