சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக 6000 அடி பள்ளத்தில் தள்ளப்பட்டது.

லண்டனில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்ற SQ321 என்ற இந்த விமானம் திடீரென திசைமாறியதை அடுத்து பயணிகள் பலரும் இருக்கையில் இருந்து தூக்கிவீசப்பட்டனர்.

இதில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஸமிதிவெஜ் ஸ்ரீநாகரின் மருத்துவமனை, ஸமிதிவெஜ் சுக்ஹம்விட் மற்றும் பாங்காக் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 58 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களைத் தவிர எஞ்சி இருப்பவர்கள் இன்று சிங்கப்பூர் சென்றடைந்தனர். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் தவிர, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

5 நிமிடத்தில் 6000 அடி அந்தர் பல்டி அடித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்… ஒருவர் பலி… 18 பேர் மருத்துவமனையில் அனுமதி… வீடியோ