டில்லி

டந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது.  இதில் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றுள்ளது.  மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த நிலையில் தற்போது அது ஆம் ஆத்மி கட்சிக்கு மாறி உள்ளது.  இது காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.  அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

காங்கிரஸ்  தலைவர்  ராகுல் காந்தி தேர்தல் முடிவுகள் குறித்து, “நாங்கள் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த தேர்தலில்  வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

காங்கிரஸ் கட்சிக்காக அரும்பாடுபட்ட தொண்டர்களுக்கும், எங்களின் நல விரும்பிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  தேர்தல் தோல்வி முடிவுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதுடன் தொடர்ந்து நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்போம் :.எனக் கூறியுள்ளார்.