உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

கிரெட்டான் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர் கேதார்நாத் ஹெலிபேடில் இருந்து 6 பேருடன் பறக்க தயாரானது.

இந்த ஹெலிகாப்டர் உயரே பறக்க துவங்கிய சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து அந்தரத்தில் வட்டமடித்தது.

இதனையடுத்து இந்த ஹெலிகாப்டரை தரையிறக்க அதன் விமானி முயற்சித்ததை அடுத்து அந்த ஹெலிபேடில் காத்திருந்த மற்ற பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

அதேவேளையில் அந்த ஹெலிகாப்டர் ஹெலிபேடில் தரையிறங்க முடியாமல் அருகில் 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் இறங்கி நின்றது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.