டெல்லி: படிவம் 17சி (பூத்வாரியாக வாக்குப்பதிவு) வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பான உத்தரவிட்டு உள்ளது. வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய 17சி படிவத்தை பொது வெளியில்   வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் விசாரணை  கோடை விடுமுறைக்குபிறகு விசாரிப்பதாக ஒத்தி வைத்துள்ளது.

தனியார்அமைப்புகள் தொடர்ந்த வழக்கான பதிவான வாக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17-ஐ, 48 மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணை  உச்சநீதிமன்ற விடுமுறைக் கால அமர்வான, நீதிபதிகள் தீபன்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா அமர்வில்  விசாரணை  நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்தது. அதில், படிவம் 17சி (பூத்வாரியாக வாக்குப்பதிவு)  வெளியிட்டால், அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும், அதனால் வெளியிட முடியாது என கூறியது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17சி படிவம் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது.

இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், ஒரு வாக்குச்சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற தகவலை அளிக்க உத்தரவிட்டால், தேர்தல் வேலைகளுக்கு இடையே, படிவம் 17-சியை வெளியிடுவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு அதிக பளுவாகிவிடும் என்று கூறி மனுவை ஒத்திவைத்தது.  மேலும், தற்போதைய நிலையில், இந்த மனுமீது, தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது,  தற்போது தேர்தல் நடைபெற்று வருவதால், இந்த கட்டத்தில் எந்த நிவாரணத்தையும் வழங்க நாங்கள் விரும்பவில்லை என்றும்,  இடைக்கால நிவாரணம் வழங்குவது இறுதி நிவாரணத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்றும், விடுமுறைக்காலம் முடிந்தபிறகு, இதற்கான உச்ச நீதிமன்ற அமர்வில் இந்த மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.