கியூபாவில் ரஷ்ய போர் கப்பல் முகாமிட்டுள்ள நிலையில் கியூபா-வுக்கு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரைந்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நிற்காமல் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அதிகார மோதல் வலுத்துவருகிறது.

கியூபா கடற்பகுதியில் ரஷ்ய போர் கப்பல் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தனது கடல் எல்லைக்கு அருகே ரஷ்ய கடற்படை இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.

இதனையடுத்து உக்ரைன் மீதான போரில் உதவ உக்ரைனுடன் அமெரிக்கா நேரடி ஒப்பந்தத்தில் ஈடுபட முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் கியூபாவுக்கு அருகே தனது நீர்மூழ்கி போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது.

அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து இருநாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.