பெங்களூரூ: 
யது தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பிரபல கன்னட நடிகர் சத்யஜித், பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 72.
இந்த வார தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, நீண்ட காலமாகப் பல உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த சத்யஜித்,  கேங்க்ரீன் காரணமாகக் கடந்த காலங்களில் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது.
சையத் நிஜாமுதீனாகப் பிறந்த சத்யஜித்,  பேருந்து ஓட்டுநராக இருந்தார்,  தனது நடிப்பு கனவுகளைத் தொடர்ந்தார். வில்லனாகத் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி, அவர் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
2000 களின் முற்பகுதி வரை, அவர் கன்னட சினிமாவில் வில்லன் மற்றும் துணை வேடங்களுக்காக மிகவும் முக்கிய நடிகராக இருந்தார். ‘சிவ மெச்சிடா கண்ணப்பா’ (1988), ‘சித்ராதா பிரேமாஞ்சலி’, ‘புட்நஞ்ச’ (1995), மற்றும் ‘அப்தமித்ரா’ (2004) படங்கள் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த படங்களாகும்.
நடிகர் பிப்ரவரியில் அவருடைய மகள் பணத்திற்காக அவரை துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும்  சத்யஜித் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
மறைந்த  சத்யஜித்  உடல்,  மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஹெக்டே நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும் என்றும்,   மாலை 3 மணியளவில் அவர் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்குக் கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்