புதுடெல்லி: 
காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்த ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என கூறியுள்ள ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திரா, காமன்வெல்த் போட்டிக்கும், ஆசியப் போட்டிகளுக்கும் இடையே குறைந்த நாட்களே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, ஆசிய கோப்பை போட்டியே தகுதி போட்டியாக இருப்பதால், அதில் இந்தியா கவனம் செலுத்தவிருக்கிறது என்றும் ஞானேந்திரா கூறியிருந்தார்.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்த ஹாக்கி இந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என்று கூறியுள்ளார்.