2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும்  – கவுதம் கம்பீர்

Must read

மும்பை: 
2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்லும் என தோன்றுகிறது என்று கவுதம்  கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   அணித்தலைவர்  மோர்கன் மற்றும் அவரது குழுவை எனது ஆதரவை அளிக்கிறேன்.
இந்தாண்டு ஐபிஎல் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று எனது மனதில் தோன்றுகிறது. அதே நேரத்தில், புதிய அணி ஒன்று,  ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  அந்த புதிய அணி,  டெல்லி கேப்பிட்டல்ஸ் அல்லது ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரூ அணியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

More articles

Latest article