டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் நேரு நினைவு நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன .
இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், நவீன இந்தியாவின் சிற்பி எனப்படும் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள், நமது நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல நமக்குத் தொடர்ந்து வழிகாட்டும் என குறிப்பிட்டுள்ளது,
இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர்களில் முக்கியமானவரான நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராவார். பிரதமராக 16 ஆண்டுகள் 286 நாள்கள் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் அதிக காலம் பிரதமராக இருந்தது நேரு ஒருவரே..
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.,
[youtube-feed feed=1]