இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்கள் எது தெரியுமா?

Must read

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், அதிக பாதிப்பு உள்ள 10 மாவட்டங்களின் பெயர்களை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறாதது சற்று ஆறுதலை தந்துள்ளது.

நாடு முழுவதும, கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக  4,187 பேர் உயிரிழந்ததாகவும் 3,18,609 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 37,23,446 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை  2,18,92,676 ஆக உள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த  மொத்த உயிரிழப்புகள் – 2,38,270 , இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை – 1,79,30,960 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா  உள்பட பல மாநிலங்களில் 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில், குறிப்பிட்ட  10 மாவட்டங்களில்தான் 25 சதவீதம்  பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,

  1. பெங்களூரு,
  2. புனே,
  3. டெல்லி,
  4. அகமதாபாத்,
  5. எர்ணாகுளம்,
  6. நாக்பூர்,
  7. மும்பை,
  8. கோழிக்கோடு,
  9. ஜெய்ப்பூர்,
  10. தானே,

அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில்  பெங்களூர் மாவட்டம் தான் முதல் இடத்தில் உள்ளது.

 

More articles

Latest article