சென்னையில் இரவு முதல் நாளை காலை வரை ஆச்சரியமூட்டும் வகையில் மழை பெய்யும்! வெதர்மேன் தகவல்…

Must read

சென்னை: சென்னை உள்பட 100 கி.மீ தூரம் வரை நாளை காலை  வரை ஆச்சரியமூட்டக்கூடிய வகையில் மழை பெய்யும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக மழை கொட்டி வருகிறது.  சென்னையில் கடந்த வார இறுதியில்  தொடங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. நேற்று இரவு வரை மழை பெய்த நிலையில், இன்று சற்றே மழை தணிந்து, வெயில் காணப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. இருந்தாலும், பல பகுதிகளில் இருந்து  வெள்ள நீர் வடியாத அவலநிலையே தொடர்கிறது.

இந்த நிலையில்தான் சென்னை மற்றும் சற்றுவட்டாரங்களை சேர்ந்த சுமார் 100 கிமீட்டர் தொலைவு வரையிலான பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்றும், சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று முதல் நாளை காலை வரை காற்றுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும். ஆகவே இம்மாவட்ட மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சில சமயம் உங்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அதீத கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த மழை சில சமயங்களில் பயன்பாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், கடந்த காலங்களில் அரபிக்கடலில் ஒரு தாழ்வு நிலை உருவாகி, மறுபுறம் இருந்து இழுக்கக்கூடிய மேகங்கள் தொடர்ந்து 50-100 மி.மீ. இன்னும் 1 நாள் கழித்து மழையில் நல்ல இடைவெளி கிடைக்கும்.

பிறகு நாளை மதியம் முதல் மழை குறைய தொடங்கும். மேற்கு மண்டலத்திலுள்ள உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும்.

சென்னை மாநகரில் (நுங்கம்பாக்கம்) நவம்பர் மாதம் அதிக மழை பொழிவு பெற்ற ஆண்டுகள் அடிப்படையில் இந்தாண்டிற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு,

1. 1918 – 1088.3 mm
2. 2015 – 1049.3 mm
3. 2021 – 1044.3 mm
4. 1985 – 983.0 mm
5. 1884 – 850.6 mm
6. 1960 – 849.5 mm
7. 1815 – 842.8 mm
8. 1922 – 833.9 mm
9. 1896 – 831.9 mm
10. 1997 – 831.9 mm

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article