சென்னை

பிரபல யூ டியுபர் சவுக்கு சங்கரை கஞ்சா கடத்தல் வழக்கில் 15 நாட்கள் நீடிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுளது.

கடந்த 4 ஆம் தேதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் காவ்லதுறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.   நேற்று அந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கோவையிலிருந்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முன்னிருத்த்ப்பட்டார்.

சவுக்கு நங்கர் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும்,  கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறினார். மேலும்  தனது பாதுகாப்பிற்காக மதுரை சிறைக்கு தன்னை மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார்.

நீதிபதி வேறு சிறைக்கு மாற்றுவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை எனவும் சிறைத்துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்து பரிகாரம் தேடிக் கொள்ளுமாறும் கூறினார்.  பிறகு இந்த வழக்கில் சவுக்கு சங்கரை மே 22 வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சவுக்கு சங்கரை நீதிமன்ற விசாரணை முடிவடைந்த்தை அடுத்து கோவை சிறைக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் அவரை அழைத்து வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள்,  அவர் அழைத்து செல்லப்பட்ட வாகனத்தின் மீது துடைப்பங்களை வீசி,  எறிந்து கோஷமிட்டுள்ளனர்.

Savukku Shankar, Ghanja case, 15 days,, judicial custody,